50. அப்பாவின் யதார்த்தம்

அப்பாவின் தலை தொங்கிப்போயிற்று… * நானும் மருத்துவர்களிடம் கற்றுக்கொண்டுவிட்டிருந்த அத்தனை வித்தைகளையும் அரங்கேற்றிக்கொண்டிருந்தேன்… * நாக்கை நீட்டுங்க… இதோ இங்க பாருங்க… கைய உயர்த்துங்க பாக்கலாம்… * அப்பாவின் விழிகளில் வெண்மையும் கருவட்டத்தின் கீழ் வளைவும் தெரிந்துகொண்டிருக்க அப்பாவின் தலை என் கரம் தாங்க நின்றுகொண்டிருந்தது. * இயலாமையை வெளிப்படுத்தும் பரவிய மனம் வாய்த்திராத அப்பா இப்படி சரிந்தாரேயானால் ஈகோவின் குறைந்தபட்ச ஆளுமையையும் அவரது மூளை இழந்து நிஜத்தில் கரைந்துபோய்விட்டார் என்று அர்த்தம். * டாக்டர் வருகிறவரைக்கும் […]

49. அப்பாவின் சுயசரிதை

நான்தான் அப்பாவை எழுதச் சொன்னேன். அப்பா தன் சுயசரிதையை எழுதவாரம்பித்தார். * ஆனால் சிற்றெறும்புகளினளவிற்குச் சுருங்கிப்போன அந்த எழுத்துக்களை அன்றைக்கே மொழிபெயர்த்துவிடவேண்டியிருந்தது. * அதோடு சாதனையாளர்கள்தான் சுயசரிதை எழுதவேண்டும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களின் ஏளனப் பார்வைகளை எங்கும் நான் எதிர்கொள்ள நேர்ந்தது. எல்லா சாதனையாளர்களும் ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, அவர்கள் பேயாய் விழித்தார்கள் – அல்லது கேள்வியைப் புரிந்துகொள்ளாமல் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எனக்கொரு பொருட்டாய் இருக்கவில்லை. * அதோடு அப்பாவின் தியானமாய் அது அமையும் என்றும் அதன் […]

48. அப்பாவின் கவிதைகள்

அப்பாவின் கவிதை புதுக்கவிதை. அப்பா சீர் அடி தளை முதலான மரபுகளை அறிந்திருக்கவில்லை. அல்லது மரபுகள் இருந்தன என்று மட்டும் அறிந்திருந்தார். * அப்பாவின் கவிதை வரிகளின் நீளம் வரிக்கு வரி மாறுபட்டுக்கொண்டிருந்தது. * என் நண்பர்களின் அப்பாக்களின் கவிதைகளில் ஏதானும் ஒரு குறைந்தபட்ச மரபாவது இருந்துவந்தது. அப்பாவின் கவிதைகளில் ஒரு நாட்டுபுறச் சந்தம்கூட இருக்கவில்லை. ஆனாலும் அப்பாவுக்கு ஒரு வாசகர் குழாம் இருந்தது. * அற்புதமான கவிதைகளை வாசித்துவிட்டு வருத்தம் சுமந்து படியிறங்கிப் போய்க்கொண்டிருந்தவர்கள் மத்தியில் […]

47. அப்பாவின் அழகு

அப்பாவின் கண்ணாடி அவரைப் பார்த்திராத நேரம் குறைவு. அப்பா என்னவோ ஐம்பதுகளின் ஹீரோக்களின் வரிசையில் வந்திருக்கவேண்டியவர் என்று அவருக்கிருந்த நம்பிக்கையின் விட்ட குறையாய் அரிதாரம் அப்பாவுக்கு வாய்த்தது. * அனுதின க்ஷவரமும் அரை டின் பௌடருமாய் அப்பா தன் அழகைப் பாதுகாத்துக்கொண்டிருந்தார்… * நானாவிதமான சென்ட்டு புட்டிகளும் குளிர்த்திரைப் பசைகளும் வெய்ல்த்திரைப் பசைகளும் யாவும் அப்பாவின் கண்ணாடிக்கு முன்னால் சிதறியிருந்தன. அந்தக் கண்ணாடியில்தான் நாங்களும் முகம் பார்த்துக்கொண்டோம் என்பதால் அம்மாவுக்கும் அக்காவுக்குமான சொத்தாய் மைக்கூடும் சாந்துப் புட்டிகளும் […]

46. அப்பாவின் நாமகரணம்

என் கொள்ளுத்தாத்தாவின் பெயர்தான் அப்பாவுக்கு வாய்த்தது. * அந்தப் பெயர் மட்டுந்தான் அவர்களுக்கிடையே பொதுவாய் இருந்தது. * கொள்ளுத்தாத்தாவின் கடைசி மகனின் கடைசிப்புத்திரனான அப்பாவுக்கு அப்பெயர் பெருத்தம்தான்… * ஆனால் அவர்களிருவருக்கும் இடையே இருந்த அத்தனை கால இடைவெளியில் அப்பாவால் அவர் பெயரை மட்டும்தான் அறிந்துவைத்திருக்க முடிந்தது. * அந்தப் பெயருக்கான உருவத்தை அவர் கண்ணாடியில் கவனிக்க நேர்ந்துவந்ததால் அப்பாவால் தான் ஒரு ஓவியத்திலும் பார்த்திராத தாத்தாவின் ஒருவத்தைத் தனியாகக் கற்பனை செய்துகொள்ளவும் முடியாமற்போயிற்று. * தாத்தாவுக்குத் […]

45. அப்பாவின் பொய்கள்

அப்பாவின் பொய்களை அவை பொய்கள்தான் என்று அப்பாவே அறிந்துவைத்திருந்தாரா என்று தெரியவில்லை. * ஆனால் அப்பா சொன்ன பொய்களெல்லாம் பொய்யென்று எழுதிய அட்டையைக் கழுத்தில் தரித்துக்கொண்டுதான் எங்கள் முன்னால் வந்து நின்றன… அப்பா அத்தனை நல்லவராயிருந்தார்! * ஆனாலும் அவர் தன் பொய்களைக் கைவிட்டுவிடவில்லை. * அப்பா அவசியமான பொய்களைக் காட்டிலும் அனாவசியமான பொய்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கும்படிக்கு அவரின் இயல்பு அவரைத் தூண்டிக்கொண்டிருந்தது. * இப்போது பொய் அப்பாவின் செயல்களில் நுழைந்துவிட்டிருந்தது. ஒரு வைரஸ்ஸைப்போல அது அவருள் வேரிட்டுவிட்டிருந்தது. […]

44. அப்பாவின் ஈகோ

அப்பா தன் ஈகோவின் இருளில் எப்போதோ தொலைந்துபோயிருந்தார். * அப்பா மட்டும் ஓர் அந்தகாரக் குருடராய் வாழ்ந்துவந்தார் என்பது அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. * அப்படியாய் அப்பாவின் கண்களுக்கு இருளோடு ரொம்பவும் ஸ்நேகமாயிற்று. அப்பா இருட்டுத்தான் நிஜம் என்று இப்போது ஒரு பிரபஞ்சக் கொள்கையைக் கைக்கொண்டிருந்தார்… * அப்படி அவரின் ஈகோவின் இருண்ட பிரபஞ்சத்தில் எங்கேனும் கண்சிமிட்டும் வெளிச்சப்புள்ளிகள் தங்களுள் உடம்பும் உயிரும் மனசும் கொண்ட ஜீவராசிகளின் களங்கள் என்பதை அப்பா நம்பத் தயாராயில்லை. * அப்பாவுக்கு […]