இதழ்கள்

ஆரண்யம்

ஆரண்யம் தமிழ் இலக்கிய வரலாற்றின் புதிய அத்தியாயங்களைத் திறந்து வைத்தது. ஸ்ரீபதி பத்மநாபாவோடு இணைந்து சுதேசமித்திரன் ஆசிரியராக இருந்து வெளிவந்த ஆரண்யம், நான்கு இதழ்களே வெளி வந்த போதும், இலக்கியம், சினிமா, கலை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பரவலான கவனத்தைப் பெற்றது. ஆரண்யத்தின் ஒவ்வொரு இதழிலும் ஒரு முழுமையான திரைக்கதை மொழிபெயர்ப்பு வெளிவந்தது. சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான், எம் டி வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய படங்களின் முழுமையான திரைக்கதைகள் ஆரண்யம் இதழிலிருந்து விரைவில் இங்கு பதிவேற்றம் பெறும். தொடர்ந்து ஆரண்யம் இதழ்களில் வெளிவந்த படைப்புகளும் இங்கு பதியப்படும்.

 

சாம்பல்

ஆசிரியர்: சுதேசமித்திரன்

சாம்பல் நேர்த்தியான வடிவமைப்போடு வெளிவந்த சிற்றிதழ். தமிழ் நவீன இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வெளிவந்தது சாம்பல். கவிஞர் விக்ரமாதித்யன் முயற்சியில் சாம்பலில் வெளிவந்த கூட்டு கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. சிறந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், புத்தக அறிமுகங்கள் ஆகியவற்றோடு ஆல்பம் மற்றும் நவீன குழந்தை இலக்கியம், சினிமா விமர்சனம் என்று சாம்பலில் வெளிவந்த படைப்புகள் இங்கு விரைவில் பதியப்படும்.

 

Leave a comment