எம்முளும் உளன் ஒரு பொருநன்!
… புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை அவ்வை பாடியதாக தும்பைத்திணையில், தானைமறம் துறையில் அமைந்த பாடல் ஒன்று உண்டு. “வைகல் எண் தேர் செய்யும் தச்சன், திங்கள் வலித்த கால் அன்னோன், எம்முளும் உளன் ஒரு பொருநன்” என்று. நண்பர் சுதேசமித்திரன் அத்தகு பொருநன் என்று கருதுகிறேன்…
… சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும் கழிவிரக்கமற்ற சுய எள்ளலையும் அங்கதத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. அச்சமற்று நினைத்ததை எழுத்தில் கொணரும் நேர்மையும் அவருக்கு உண்டு…
… இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனை கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது. எனவே தனித்தன்மையானது…
– நாஞ்சில் நாடன் (சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவல் முன்னுரையில்)