50. அப்பாவின் யதார்த்தம்

ப்பாவின் தலை தொங்கிப்போயிற்று…

*
நானும்
மருத்துவர்களிடம் கற்றுக்கொண்டுவிட்டிருந்த
அத்தனை வித்தைகளையும்
அரங்கேற்றிக்கொண்டிருந்தேன்…

*

நாக்கை நீட்டுங்க… இதோ இங்க பாருங்க…
கைய உயர்த்துங்க பாக்கலாம்…

*

அப்பாவின் விழிகளில் வெண்மையும்
கருவட்டத்தின் கீழ் வளைவும் தெரிந்துகொண்டிருக்க
அப்பாவின் தலை
என் கரம் தாங்க நின்றுகொண்டிருந்தது.

*

இயலாமையை வெளிப்படுத்தும்
பரவிய மனம் வாய்த்திராத அப்பா
இப்படி சரிந்தாரேயானால்
ஈகோவின் குறைந்தபட்ச ஆளுமையையும்
அவரது மூளை இழந்து
நிஜத்தில் கரைந்துபோய்விட்டார் என்று அர்த்தம்.

*

டாக்டர் வருகிறவரைக்கும்
அப்பா என் கைகளில்தான் உயிர்த்திருக்கிறார்
என்பதுணர்ந்து நான் செயல்பட்டுக்கொண்டிருந்தேன்.

*

எப்போதும்
பொய்மையின் கைப்பாவையாய் இருந்துவந்த அப்பா
நிஜத்தை எட்டிப்பிடிக்கிற காலத்தை
அவரிடமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த முட்டாள் நான்
அப்பாவின் அந்த
சிலநேர நிஜத்தின் சஞ்சாரத்தை ஆமோதித்தலகற்றி
அவரைத் திரும்பவும்
அவரது பொய்மைக்குத் திருப்பத்தான் முயன்றுகொண்டிருந்தேன்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s