49. அப்பாவின் சுயசரிதை

நான்தான் அப்பாவை எழுதச் சொன்னேன்.
அப்பா தன் சுயசரிதையை எழுதவாரம்பித்தார்.

*

ஆனால் சிற்றெறும்புகளினளவிற்குச்
சுருங்கிப்போன அந்த எழுத்துக்களை
அன்றைக்கே
மொழிபெயர்த்துவிடவேண்டியிருந்தது.

*

அதோடு
சாதனையாளர்கள்தான் சுயசரிதை எழுதவேண்டும் என்று
நம்பிக்கொண்டிருந்தவர்களின் ஏளனப் பார்வைகளை
எங்கும் நான் எதிர்கொள்ள நேர்ந்தது.
எல்லா சாதனையாளர்களும் ஏன் எழுதவில்லை
என்ற கேள்விக்கு,
அவர்கள் பேயாய் விழித்தார்கள் – அல்லது
கேள்வியைப் புரிந்துகொள்ளாமல்
பதிலளித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எனக்கொரு பொருட்டாய் இருக்கவில்லை.

*

அதோடு
அப்பாவின் தியானமாய் அது அமையும் என்றும்
அதன் வாயிலாய்
அப்பா வெளிக்கொண்டுவந்துகொள்ளப்போகும் விடைகள்
அவர்களின் அற்புதங்களைத் திருப்பும் என்றும்
நான் போட்டிருந்த கணக்கை
அவர்களிடம் தெரிவித்திருக்கவில்லை.

*

ஆனால்
அப்பாவின் சுயசரிதை
தன் தாத்பர்கங்களை உணர்ந்துகொள்ளாது
பொய்யெழுத்துக்களால் மட்டுமே
எழுதப்பட்டு வந்ததைக் கண்ணுற்றேன்.

*

அப்பா
நானறிந்த அவரின் ரகசியங்களைக்கூட
அதில் வெளியிட்டிருக்கவில்லை.

*

அதன்மூலம் அப்பா
என்னையும் தன்னையும் ஒருசேர ஏமாற்றிக்கொண்டு
என்னை அவர்குறித்து எழுதத் தூண்டினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s