45. அப்பாவின் பொய்கள்

ப்பாவின் பொய்களை
அவை பொய்கள்தான் என்று
அப்பாவே அறிந்துவைத்திருந்தாரா
என்று தெரியவில்லை.

*

ஆனால்
அப்பா சொன்ன பொய்களெல்லாம்
பொய்யென்று எழுதிய அட்டையைக்
கழுத்தில் தரித்துக்கொண்டுதான்
எங்கள் முன்னால் வந்து நின்றன…
அப்பா அத்தனை நல்லவராயிருந்தார்!

*

ஆனாலும்
அவர் தன் பொய்களைக் கைவிட்டுவிடவில்லை.

*

அப்பா அவசியமான பொய்களைக் காட்டிலும்
அனாவசியமான பொய்களைத்தான்
சொல்லிக்கொண்டிருக்கும்படிக்கு
அவரின் இயல்பு அவரைத் தூண்டிக்கொண்டிருந்தது.

*

இப்போது பொய்
அப்பாவின் செயல்களில் நுழைந்துவிட்டிருந்தது.
ஒரு வைரஸ்ஸைப்போல
அது அவருள் வேரிட்டுவிட்டிருந்தது.
இதனால் அப்பாவின் செயல்களில்
அனர்த்தம் த்வனிக்கத் துவங்கிற்று.
நிஜமான காரணங்களை
அப்பா மறந்துபோகத் தொடங்கினார்.

*

மறந்துபோயிற்று என்கிற வார்த்தையையும்கூட
அவர் இப்போது மறந்துபோயிருக்க,
நிஜத்தின் கடைசிச் சொட்டையும் இழந்துவிட்டிருந்தார்.

*

ஏன்? – என்று எதற்கோ கேட்கப்பட்ட கேள்விக்கு
காரணமொன்றை அப்பா இப்போது தேடிக்கொண்டிருக்கையில்
அவர் முதுகின் பின்னால் கைகட்டிக் காத்திருந்த
நிஜத்தின் தரிசனம் எங்களுக்கு கிடைத்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s