44. அப்பாவின் ஈகோ

ப்பா தன் ஈகோவின் இருளில்
எப்போதோ தொலைந்துபோயிருந்தார்.

*

அப்பா மட்டும் ஓர் அந்தகாரக் குருடராய்
வாழ்ந்துவந்தார் என்பது
அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது.

*

அப்படியாய்
அப்பாவின் கண்களுக்கு
இருளோடு ரொம்பவும் ஸ்நேகமாயிற்று.
அப்பா இருட்டுத்தான் நிஜம் என்று இப்போது
ஒரு பிரபஞ்சக் கொள்கையைக் கைக்கொண்டிருந்தார்…

*

அப்படி அவரின் ஈகோவின் இருண்ட பிரபஞ்சத்தில்
எங்கேனும் கண்சிமிட்டும் வெளிச்சப்புள்ளிகள்
தங்களுள்
உடம்பும் உயிரும் மனசும் கொண்ட
ஜீவராசிகளின் களங்கள் என்பதை
அப்பா நம்பத் தயாராயில்லை.

*

அப்பாவுக்கு
அவரின் இருட்டு மட்டும்தான் பிரதானமாகிப்போயிருந்தது…

*

அப்படியாய்
பால்வெளியில் இருளின் உள்ளிழுக்கும் ஆகர்ஷணத்துள்
அப்பா தலைகீழாய் விழுந்தார்.

*

இப்படியாகத்தான்
ஈகோவின் இருளில் அப்பா தொலைந்துபோனார்.

*

ஆனால் – நான் ஏற்கனவே சொன்னபடி
இதனையெல்லாம்
அப்போது நான் அறிந்துவைத்திருக்கவில்லை.

*

ஆனால் தன் தள்ளாமையின்பால்
தன் ஈகோவைப் பிரயோகம் செய்த அப்பாவை
அது பிடித்துத் தள்ளிய தள்ளலில்
தடாலென்று அப்பா விழுந்த ஓசையில்
அது எனக்குப் புலப்பட்டுவிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s