43. அப்பாவின் அரங்கம்

ப்பாவின் அரங்கத்தில்
எப்போதும் அவர்தான் ஹீரோ.

*

அவர் மேடையிலிருந்தாலும் சரி
பார்வையாளர் மத்தியிலிருந்தாலும் சரி
அத்தனைபேரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்…

*

அப்பா மேடையிலிருந்தபோதெல்லாம்
பார்வையாளர்கள் நிறையப்பேர்
ரயிலைத் தவறவிட்டார்கள்…
அப்பாவை இருக்கை வரிசையில் பார்த்துக்கொண்டிருந்த
நடிகர்கள் வசனத்தைத் தவறவிட்டார்கள்…

*

அப்பாவின் வசனங்கள் மேடையேறிப்போய்
அந்த நாடகங்களின் காமெடி ட்ராக்குகளாய் ஆகின.

*

முடிவில்
நாடகத்தில் வெறும் காமெடி ட்ராக்தான் எஞ்சிற்று

*

எல்லோரும் குழந்தைகளைப்போல
சிரித்துவிட்டுப் போனார்கள்.
வீட்டுக்குப் போனபின்னால்
அவர்களில் எத்தனைபேர்
வெறுமையை உணர்ந்துகொள்ள நேர்ந்ததோ
தெரியவில்லை.

*

ஆனால் அவர்களும்
அடுத்த நாடகத்தில்
அப்பாவைப் பார்க்க வந்துவிட்டிருந்தார்கள்…

*

ஆனால் திடீரென்று ஒருநாள்
விளக்ணைந்ததுபோல்
அப்பாவின் அரங்கங்கள் நிசப்தத்தில் மூழ்கிப்போயின.

*

அப்பா இப்போது மேடைகளில்
பிணமாக நடித்துக்கொண்டிருந்தார்.

*

வரிசைகளிலிருந்து அவர் வெளிப்படுத்தும்
காமெடி ட்ராக்குகளை மட்டுமே நம்பிக்கொண்டு
மேடையேறியிருந்த நடிகர்கள்
வழக்கம்போல் அப்பாவைக் காப்பியடித்துக்கொண்டிருந்தார்கள்.
நாடகம் எந்தச் சலனமும் இல்லாமல்
ஒரு புகைப்படம் போல உறைந்துபோயிற்று.

*

இப்படியாய்
அப்பாவின் அரங்கத்தில்
நாங்கள் மட்டுமே எஞ்சினோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s