42. அப்பாவின் பல்லக்கு

ப்பா ஒரு முகலாய ராஜன் போல
மூடுபல்லக்கொன்றில் பயணம் செய்தார்.

*

முகமது பின் துக்ளக்கைப் போல
அப்பா மாற்றலான ஒவ்வொரு ஊரிலும்
ஒருசிலர் அப்பாவின் பல்லக்கைத் தூக்கத்
தயாராய்க் காத்திருந்தார்கள்.

*

பல்லக்கில்
தெய்வத்தைத் தூக்கிக்கொண்டு போவதாக
மூடுதிரையை ஊடுருவிச் சேவித்துக்கொண்டு
அவர்கள் தம் அலுப்பின் பாடல்களை
உற்சாகத்தின் பொருட்டு பாடிக்கொண்டு
நடந்தார்கள்.

*

காத்துக்கொண்டிருந்த பல்லக்குத்தூக்கிகளிடம்
அதனை ஒப்படைத்த அவர்கள்
தெய்வத்தின் பூதத்தைக் கடைசிவரைக்கும்
தரிசிக்காமலே நின்றுவிட்டார்கள்.

*

கட்டளைகளின் ஓசைதான்
அவர்களின் எஜமானனாய் இருந்துவந்தது.

*

பல்லக்கினுள்ளே விரவியிருந்த
நிக்கோடின் காற்றையும் ஆல்கஹால் நெடியையும்
அவர்கள் உணர்ந்துகொண்டிருக்கவில்லை.

*

கடைசியில்
பல்லக்கை இறக்கிவைக்கும் தருணம் வந்தது.

*

அப்பா இறங்கவேண்டிய தருணத்தில்
நாங்கள் திடீரென்று பல்லக்கைத் தூக்கிக்கொண்டோம்…
அப்பாவின் முகத்தை அடுத்தவரறியாதபடிக்கு
சுமந்து திரியவாரம்பித்தோம்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s