41. அப்பாவின் திருப்பள்ளி எழுச்சி

ப்பா
ஆல் இந்தியா ரேடியோவின்
அதிகாலைப் பாடல்கள் வாயிலாய்
என்னைத் திருப்பள்ளி எழச்செய்துகொண்டிருந்தார்.

*

நான்
இரவுகளில் என் அறைக்கதவை
அடைத்துக்கொள்ளவாரம்பித்தேன்.
ஆனால் திரும்பவும் காலைகளில்
ஆல் இந்தியா ரேடியோவின் தீண்டலால்
நான் விழித்துக்கொண்டபோது
அறைக்கதவு திறந்தே இருந்தது.

*

அதன் மூலமாய்
என் அறைக்கதவை
நான் தாளிட்டுக்கொள்ளப் பண்ணினார் அப்பா.
இப்போது
அந்த ஒற்றைக் கதவின் குமிழைத் திருப்பிய ஓசை
விழிப்புத்தட்டப் போதுமானதாய் இருந்தது.

*

எனக்கு உறக்கம்,
அப்பாவின் திருப்பள்ளி எழுச்சியைக் காட்டிலும்
முக்கியமானதாய் இருந்தது.

*

நான் இப்போது
குமிழைக் கம்பியொன்றால் கட்டிவைத்தேன்.

*

இப்படியாய்
அப்பாவுக்கும் எனக்கும் இடையே
ஒரு மௌன நாடகம் நடந்துகொண்டிருந்தது.

*

அடுத்தநாள்
அப்பா என் கதவைத் தட்டுவார்
என்று எதிர்பார்த்து
நான் விழித்துக்கொண்டேன்.

*

அப்பா தட்டவில்லை.
நாடகம் முடிந்துபோயிற்று…

*

மறுநாள்
கதவு திறந்தே இருந்தது…
ரேடியோ ஒலிக்கவில்லை…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s