40. அப்பாவின் செருப்பு

ப்பர் செருப்புகள்
அப்பாவின் காலை வாரிவிட்டன

*

இன்னொருதடவை காலை முறித்துக்கொள்ள விரும்பாத அப்பா
ஒரே மாதிரியான தோல் செருப்புகளையே
திரும்பத் திரும்ப வாங்கிக்கொண்டிருந்தார்.

*

அதோடு,
அப்பாவை ஒத்த அதிகாரிகள் அத்தனை பேரும்
கிட்டத்தட்ட அதேமாதிரியான செருப்புகளைத்தான்
விரும்பிக்கொண்டிருந்தார்கள் என்பதால்
பரஸ்பரம் கால்களைப் பார்த்துக்கொண்டு
அவர்களைப் போலவே அப்பாவும்
அந்த வகை செருப்புக்களை
வாங்கிக்கொண்டிருந்திருக்க நேர்ந்திருக்கலாம்.

*

கால வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை
அப்பா அந்த செருப்பால்தான்
வெகு காலம் மிதித்து வந்தார் என்பதால்,
அவரின் ஆடைப் புரட்சியின் ஓர் அங்கமாக
இந்தச் செருப்பு மட்டும் இடம்பெறாமல் போயிற்று.

*

ஆனால்
நான் விரும்பிய ஷூக்களை
என்னால் அடைய முடிந்தது.
ஒருவேளை
அப்பாவின் வடிகால் அதன்மூலம் வழிந்திருக்கலாம்…

*

இப்படியாக
என்னிடம் ஷூக்கள் மட்டுமே எஞ்சியிருக்க
அவரசமாக அடுத்த தெருவுக்குப் போவதற்கும்
நான் ஒரு ஷூவுக்குள்
காலை நுழைத்துக்கொண்டிருந்தேன்…

*

ஆனால்
கடைசியில் அப்பாவின் செருப்பு
எனக்கு அவசரத்துக்கு உதவ ஆரம்பித்தது.
அப்பா வீட்டுக்குள் மட்டுமே நடந்த நடைக்கு
செருப்பு தேவைப்பட்டிருக்கவில்லை என்பதால்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s