39. அப்பாவின் அரசாங்க உத்யோகம்

அப்பா எதிர்பார்த்த காலங்களெல்லாம் வீணாய்ப் போக
அத்தனை தாமதமாய் நாங்கள் பிறந்தோம்.

*

ஆக…
அப்பா எங்களை எதிர்பார்த்திராத சமயத்தில்
எங்கள் வரவால்
அப்பாவின் அத்தனை வருஷ தாராளம்
கொஞ்சமும் சேதப்படவில்லை.
அப்பா சேமிப்பின் நுட்பம் உணராது
அதன் எதிர்த் திசையில்
வெகுதூரம் வந்துவிட்டிருந்தார்.

*

மளிகைக்கடை அண்ணாச்சிகள்
அப்பாவின் அடுத்தமாத சம்பளத்தின் நம்பிக்கையில்
இந்த மாதம் சரக்கு தந்துகொண்டிருந்தார்கள்.

*

சம்பளத்துக்காக வேலை என்பது மறந்து
வேலை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாய்
அறிவு மரத்துப் போகச்செய்யும் அரசாங்க உத்யோகம்
அப்பாவையும் விட்டுவைக்கவில்லை.

*

அப்பா மிகவும் அற்புதமானவர் என்று
பாலகனான நான்
அறிந்து வைத்திருந்ததும் அதனால்தான்…

*

அடுத்த மாத சம்பளம் என்பது
அத்தனை சதவிகித உறுதியாய்
அப்பாவால் எனக்காக எதையும்
கடன் வாங்க முடிந்தது.
அடுத்த மாதம் அதைத் திருப்பித் தரவும் முடிந்தது.

*

இப்படியாய்
அப்பா எங்களை இந்திரலோகத்தில் வளர்த்தார்.

*

ஆனால்
ஒருநாள்
அப்பா ரிட்டயரானார்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s