38. அப்பாவின் கையொப்பம்

ப்பாவின் கையொப்பத்திலிருந்து
அவர் பெயரை வாசிக்க முடியாது…

*

ஆனாலும்
வெகு அற்புதமான கையொப்பம் அது.
அதில் எந்த ஒரு ஆங்கிலேயனும்
ஓர் ஆங்கிலப் பெயரைத் தேடிக்கொண்டிருப்பான்.

*

கையொப்பத்தின் அடியில்
கோடோ புள்ளிகளோ கிடையாது,
அனாவஸ்யமான நெளிவுகளின் துவக்கமும் இராது.
அப்பாவின் கையொப்பத்தில்
அப்பாவின் பெயர் மட்டும்தான் இருக்கும்.

**

என் கையொப்பம்
அப்பாவைப்போல அமையவில்லை.

*

நான் என் கையொப்பங்களை
மாற்றிக்கொண்டேயிருந்தேன்.
ஒவ்வொரு முறையும் அடுத்தவர்கள்
அதில் என் பெயரைப் படித்துக்காட்டிவிட்டார்கள்.
நான் படிக்க இயலாத கையொப்பங்களைப் போட்டபோது
அவற்றில் என் பெயர் இருக்கவில்லை.

*

வாரணாசியில் விருப்பத்தை விடுவதுபோல
நான் மாறிக்கொண்டிருந்த ஒவ்வொரு பள்ளிக்கும்
ஒவ்வொரு கையொப்பத்தை விட்டுவிட்டு வந்திருந்தேன்.

*

கல்லூரி விண்ணப்பத்தில் நான் இட்ட கையொப்பத்தில்
கிராஃபாலஜி தெரிவித்த அத்தனை தவறுகளும் இருந்தன என்பதால்தான்
என் கல்லூரிப் படிப்பை நான் விட்டுவிட நேர்ந்தது என்று
அது தன் ஜோசியத்தைச் சொல்லிக்கொண்டிருந்தது.

*

நான் இன்னும்
எனக்கென்று ஒரு கையொப்ப அடையாளம் தேடி
அலைந்துகொண்டிருக்க,
அப்பா என்னதான் ஏதும் சொல்லாமலே
ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில்
கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார் என்றாலும்
அந்த வயசின் இயல்பின்படிக்கு நான் கற்று வைத்திருந்த
அப்பாவின் கையொப்பம் மட்டும் – இப்போதும்
அச்சு அசலாய் வந்துகொண்டிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s