37. அப்பாவின் கடிகாரம்

ப்பாவின் தோசைக்கல் கடிகாரம்
நின்று நின்று ஓடிற்று.
அவர் சுவரில் பார்த்து அதைச் சரிசெய்து
ஒவ்வொரு தினமும் இரண்டுதரம் சாவி கொடுத்தால்
அடுத்த சிலமணி தளராமல் ஓடிற்று.

*

அந்தத் தங்க வண்ணம் பூசிய
இந்தியக் கடிகாரம்தான்
அப்பாவின் கடைசிக் கடிகாரம் என்பதில்
சந்தேகமில்லை.

*

அப்பா ஒன்றன்பின் ஒன்றாய்
அன்னிய தேசக் கடிகாரங்களை
இந்தக் கையில்தான் கட்டியிருந்தார்.
அவையனைத்தும் தாத்பர்யம் உணர்ந்து
அப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமலே
அவரைப் பிரிந்துவிட்டிருந்தன.

*

ஒருவேளை அப்பாவின் வேகத்தைக் காட்டிலும்
வினாடி முள்ளின் வேகம் விரைந்துகொண்டிருப்பதை
அவற்றை அவரறியாமல் எடுத்துப்போனவர்கள்
கவனித்திருக்க வேண்டும்.

*

அப்பாவும் சளைக்காமல்
தன் அடுத்த கடிகாரத்தை வாங்கிக்கொண்டிருந்தார்.

*

கடைசியில்
அப்பா தளர்ந்து தன்
புறப்பாடுகளை மறந்து
நாலு சுவருக்கு மத்தியில்
முடங்கிப்போன சமயத்தில்
இந்த இந்தியக் கடிகாரம்தான்
அந்த பத்திரத்தோடு எஞ்சிற்று.

*

அத்தனை அலுவல்களின் மத்தியில்
தொலைந்துபட்டுக்கொண்டிருந்த
அற்புத கடிகாரங்களைப்
புறங்கை திருப்பிப் பார்த்தும் இராத அப்பா,
என்னிடம் நேரம் கேட்டுத் திருப்பி
இந்தத் தங்கமுலாம் கடிகாரத்தைக்
கையில் கட்டிக்கொண்டார்.

*

இப்போது
கடிகாரம் பார்ப்பதைத் தவிர
அவருக்கு வேறு அலுவல் இருக்கவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s