35. அப்பாவின் புகை

ப்பா சிகரெட்டை
முதுகுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டார்.
அப்பாவை இந்த வழியில்
நான் எதிர்பார்க்கவில்லை.

*

நட்டநடுச் சாலையில் நானும் அப்பாவும்
அந்நியர்கள் போலப் பேசிக்கொண்டிருந்தோம்.

*

பார்த்தவர்கள்
அப்பாவின் பவ்யத்தையும்
முதுகுப் புகையையும் வைத்து
என்னை அவரின் முதலாளி என்று நினைத்திருப்பார்கள்.

*

அதுவரைக்கும்
புகையை நான் கவனித்திருக்கவில்லை.
காற்றில்லாத நேரமாகையால்
அப்பாவின் தோளுக்கு மேலே
நெளிந்துகொண்டு புறப்பட்டது அது.

*

நான்
வெட்டிக்கொண்டு நகர்ந்தேன்.

*

அப்பா ஏன்
எனக்கு பயந்து மறைத்துக்கொள்ளவேண்டும்?
நானறியாததா?
வீட்டில் யாரும் அறியாததா?
அப்பா ராஜாவாட்டம்
வரவேற்பறையிலேயே புகைக்கலாமே…
யார் கேட்பார்?

**

அப்பாவின் நண்பர் வாயிலாய்
அப்புறம் எப்போதோ
எனக்கு விடை கிட்டிற்று.
அப்பா என்னைப் புகைக்கத் தூண்டவில்லை என்றுதான்
அதன் மூலம் உணர்த்திக்கொண்டிருந்தார்
என்று அவர் சொன்னார்.

*

அதை நேரடியாகவே சொல்லியிருந்தால்
ஒருவேளை நான்
புகைக்காமல் இருந்திருப்பேனே என்றேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s