33. அப்பாவின் ட்ராம் வண்டி

ப்பா யாருக்காகவும் காத்திருக்க நேரவில்லை.
அவர் தன் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்…
*
நட்டநடுச் சாலையில்
முப்பதுகளின் ட்ராம் வண்டியாய்
நிற்றல் இல்லாத தேரோட்ட வேகம்
அப்பாவுக்கு வாய்த்தது.
*
அப்பாவை விரும்பியவர்களும்
விலகியவர்களும்
அந்த இடைவிடாத நகர்தலினூடே
ஏறிக்கொள்ளவும் இறங்கிக்கொள்ளவும்
செய்தார்கள்.
*
ஆனால்
அத்தனை மெதுவாய்ப் போகிற வண்டியை
அவசரப்பட நேர்கையில் தவிர
யாரும் விரும்பாதிருக்க இயலாது என்பதால்
அப்பாவை எல்லோருக்கும் பிடித்தது.
*
அப்படி
வாழ்க்கையின் சாலையைப் பிளந்துகொண்டு
அப்பாவின் ட்ராம் வண்டி
பிரத்யேகத் தண்டவாளத்தில் நகர்ந்துகொண்டிருந்தது.
*
ஆனால் ட்ராம் வண்டிகளின் வேகத்தை
உலகம் மறந்துபோக நேர்ந்த
அசுர வாழ்க்கையில்
அப்பாவின் ட்ராம் வண்டியும்
ஒரேயடியாய் நின்றுபோயிற்று.
*
இருந்தும்
இந்த அற்பக் காரணத்திற்காகத்
தன் இயல்பை மாற்றிக்கொள்ள இயலாத வண்டி
அடைக்குந்தாழற்ற தன்னுடம்பில்
யாரும் உலவ அனுமதித்தது என்றாலும்
தன் எளிய உதவியையும் இப்போது நிறுத்திக்கொண்டு
எப்போதும் எதைப்பற்றியும்
கவலைப்படாமல் நின்றுகொண்டிருந்தது.
*
அப்பா
இப்போதும்
யாருக்காகவும்
காத்திருக்க நேரவில்லை.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s