32. அப்பாவின் தயக்கம்

எங்களைக்கூட தூக்கி வளர்த்திருக்கவில்லை அப்பா…
*
மழலையின் மென்மையை
அவர் கடைசிவரைக்கும் அறிந்துகொள்ளவேயில்லை.
*
அகத்து வேலைகளாலோ;
புறத்து வேலைகளாலோ;
அனாவஸ்யங்களை ஏற்றிக்கொண்ட மனம்,
தன்னைத் தானே சுருக்கிக்கொள்ள நேர்ந்துவிட்டதாலோ
கெட்டிப்பட்டுப் போய்விட்ட தேகங்கள்
இருக்கையில் நாற்காலிகளாகவும்
நிற்கையில் தூண்களாகவும்
மரப்பட்டுப் போயிருக்க,
குழந்தைகளின் தேகத்தில்தான்
குழைவு எஞ்சியிருக்கிறது என்பதையும்
அப்பா உணர்ந்திருக்கவில்லை.
*
மழலையின் சங்கேதத்தில்
தேவப் பரிபாஷைகளின்
அர்த்தங்களைக் காட்டிலும்
அனர்த்தங்கள்தான் அப்பாவுக்குப் புரிபட்டன.
*
என்னைத் தூக்கு
– என்று கரம் விரித்த குழந்தைகள்கூட
மூத்திரம் பெய்துவிடுவேன் – என்றுதான்
அப்பாவை மிரட்டியிருக்கவேண்டும்.
*
என்னோடு பேசிக்கொண்டிருந்த நண்பனின் மடியிலிருந்து
குழந்தையை வாங்கிக்கொண்ட அவன் மனைவி
தாத்தா பாரு – என்று அப்பாவிடம் நீட்ட
குழந்தையும் அப்பாவும் பரஸ்பரம்
மலங்க மலங்க விழித்தார்கள்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s