31. அப்பாவின் துக்கம்

ப்பாவைக் காட்டிலும் இளைய
பால்ய சிநேகிதர் ஒருவர்
அப்பாவை முந்திக்கொண்டுவிட்டார்.
*
அவர் எப்படி உத்யோகத்தில்
அப்பாவை முந்தினாரோ
அதேபோலத்தான் இப்போதும்…
*
வாசற்படியும் இறங்க இயலாத
தள்ளாமையின் வீட்டில்
படுக்கையறைக்கும் ஹாலுக்கும்
இடையே மட்டும் – அப்பா
தன் பயணங்களை மேற்கொண்டு கொண்டிருக்க,
குரங்கு அப்பம் கதையாய்
இழந்த மீசையுடன்
நான் போவதைப் பார்த்து,
எனக்கு  விஷயம் தெரியவே தெரியாதே
– என்று கேட்ட
அப்பாவைக் காட்டிலும் இளைய
இன்னொரு சிநேகிதர்,
இதற்குப் பிராயச்சித்தமாய்
அந்த பால்ய சிநேகிதர் முந்திக்கொண்ட விஷயத்தை
அவரு கொஞ்சம் சீரியஸா இருக்காராம் – என்று
அப்பாவிடம் வந்து சொன்னார்…
அடடே – என்றார் அப்பா.
*
இப்போது சொல்லலாமா?
அப்பா செய்தி தாங்குவாரா? – என்று
ஒருவாரம் கழிந்த ஒரு நாள்
அவர் என்னைக் கேட்கையில்
அப்போதே சொல்லியிருக்கலாம்
– என்ற என்னை முறைத்து,
அப்பாவிடம் பையப் பைய
விஷயம் சொன்னார் அவர்.
அப்பா அதற்கும் அடடே – என்ற மறுகணம்
ஏழு மணியாச்சு! டிஃபன் ஆச்சா?
– என்றார் அம்மாவை.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s