30. அப்பாவின் திருத்தம்

ப்பாவுக்கு
வெள்ளை அரைக்கைச் சட்டையும்
பாலியஸ்டர் வேஷ்டியும்
வெகுநாட்கள் அடையாளமாக இருந்தன.
*
தன் பணியின் இயல்பின்படி
அடுத்தவர்க்காக மட்டும் அப்பா
தொடர்ந்துகொண்டிருந்த அந்தப் பழக்கம்
பால்யகாலப் பதவிசு
அதற்குள் ஒரு வட்டம் வந்துவிட்டிருக்க,
திரும்பவும் அப்பாவிடம் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.
*
தானாய் ஓய்வு கோரக்கூடிய அனுபவ வருஷங்களை
அப்பா எட்டிப்பிடித்துவிட்டதாலும்கூட
ஒருவேளை அப்படி நேர்ந்திருக்கலாம்.
*
முதலில் அப்பா
வர்ணச் சட்டைகளின் வாயிலாய்த்
தன் சீர்திருத்தத்தைத் துவக்கினார்.
*
அப்பாவுக்கு அவை நன்றாக இருந்ததாக
அவரின் அடையாளம் குறித்த கவலை இல்லாதவர்கள்
அப்பாவிடம் சொன்னார்கள்.
*
அப்பா இப்போது
அரை டஜன் பேன்ட்டுகள் வாங்கினார்.
அவற்றையும்கூட அவர்கள்
அப்படித்தான் சொன்னார்கள்.
*
ஆனால்
அத்தனை வருஷ ஆடைப்பழக்கத்தால்
அதிகரித்துப்போயிருந்த அவயங்கள் பிதுங்க
அப்பா நடந்துகொண்டிருந்தார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s