28. அப்பாவின் மகிமை

ப்பாவுக்கு
டெண்ட் கொட்டகைகள் என்றும்
ஏஸி திரையரங்கங்கள் என்றும்
பாகுபாடு ஏதும் இல்லை.
*
அவருக்கு முக்கியம் சினிமாதான்…
*
அநேகமாக
எல்லா மாலைகளிலுமே
நாங்கள் தியேட்டர்களை நோக்கிப்
போய்க்கொண்டிருந்தோம்…
*
அப்பாவுக்கு
எம்ஜியார் சிவாஜி
ரஜினி கமல்
தியாகராஜ பாகவதர் என்று
தனி விருப்பம் ஏதும் இல்லை.
*
நாங்கள்
எல்லார் படங்களையும்
பார்த்துக்கொண்டிருந்தோம்…
*
அடுத்த நாளைக்கு
வீட்டுப்பாடம் தந்திருந்த
அறிவியல் வாத்தியர்
அரங்கத்தில்
அப்பாவைப் பார்த்து
வணக்கம் போட்டார்…
*
இடைவேளையில்
அப்பா வாங்கித் தந்த கலருக்கு
அடுத்தநாள் வகுப்பில்,
படிக்கிற பையன்கள் எடுத்து நீட்டியும்
எல்லாம் பண்ணீட்டு வந்திருப்பீங்க,
அடுத்த பாடத்தைப் பார்க்கலாம் – என்றார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s