27. அப்பாவின் அபயக்கரம்

என் திட்டப்படிப்புக் காலங்களின்
கடைசித் தினம்
என் சக மாணவர்களுக்கு முன்பே
எனக்கு வந்துவிட்டது.
*
அவர்கள் அதன் வாலைப்பிடித்துக்கொண்டு
அது அலைந்த அத்தனை மலச்சந்துகளிலும்
அலைந்துகொண்டிருக்க,
ஒருநாள்
சுவாசம் அடைபடும் கழிவுச் சுகந்தத்தின்
பலாத்காரத்தை உதறிக்கொண்டு
நான் வெளியே வந்து விழுந்தேன்.
*
இந்த தேசத்தின் இனிய கல்வித்திட்டத்தின்
கரைகளில் ஒதுங்கியிருந்த
அரைவேக்காட்டு குருக்களின்
மஞ்சள் ஆர்க்கர் வண்ண நுரைகளின் விளிம்பில்
திரும்பவும் கால் நனைக்க அஞ்சிக்கொண்டு
ஆதிமூலமே – என்று நான் எழுப்பிய குரலுக்கு
அபயம் தந்தது அப்பாதான்.
*
அப்பா என் கரத்தைப் பற்றிக்கொண்டு
என்னை நரகலினின்றும்
என் விருப்பத்தின் விளிம்புக்கு இழுத்துவிட்டார்.
*
பாடத்திட்டத்தின் கேவலங்களை
பல்கலைக்கழகம் மிதித்திராத அப்பா
எத்தனை எளிமையாய் உணர்ந்துவிட்டிருக்கவேண்டும் என்று
அவர் செயலுக்கு நான் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன்.
*
அவன் இஷ்டத்துக்கு வளைந்து
அவனைக் கெடுத்துவிட்டார் என்று
அடுத்தவர்கள் சொன்னார்கள்.
*
இரண்டும் இல்லையென்று அப்புறம் அறிந்தேன்.
அப்பா எத்தனை இக்கட்டிலும்
சுயமாய்த் தீர்மானிக்கப் பயின்றிருக்கவில்லை என்றும்
அடுத்தவர் தீர்மானங்களைத்தான்
ஆதரித்து வந்தார் என்றும்
அதை அறிந்தவர்களிடம்தான் அவர்
தோற்றுக்கொண்டிருந்தார் என்றும்
அறிந்துகொண்ட பின்னால்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s