26. அப்பாவின் புன்னகை

ப்பாவின் புன்னகை
அவர் பெல்செட்டின் உதவியால்
அவரின் அஞ்சு வயசு ஃபோட்டோவில் இருக்கிற
அதே அச்சில் இருந்து வருகிறது.
*
ஐயா முகத்துக்காகவே வேலை செய்யலாம்
முன்னயும் ஒருத்தன் இருந்தானே
– என்று அவர் ஏவல்களை
இட்டபடி செய்துகொண்டிருக்கப்
பணித்தது அவரது புன்னகை.
*
அப்பாவின் அடையாளமாக
அவர் முகத்தைக் காட்டிலும்
புன்னகையைக் கொண்டிருந்தார்கள்
நிறையப் பேர்…
*
நெற்றியில் உதைக்கிற சிக்கலையும்
புன்னகையில் ஊறப்போட்டு
செயலிழக்கச் செய்யும் வித்தையை
அவரறியாமலே அப்பா பயின்றுவைத்திருந்தார்.
*
வெறும் வறட்டுப் புன்னகையில்
இப்படி ஆத்மாவின் கிரணங்கள்
வழிகிற வாய்ப்பில்லை என்று
அப்பாவின் அகம் தெரியாத் தொலைவிலிருந்து அவர்கள்
அடித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்…
*
புன்னகை என்பது
ஆண்மைக்குள் பெண்மையின் மானி
என்பதன் ஈர்ப்பால்தான்
பெண்கள் அவரை அணுகிக்கொண்டிருந்தார்கள்.
*
ஆனால் இப்போது
எழுந்துதானே அன்று விழுந்தீர் – என்று
இயலாமையை எதிர்த்துக்கொண்டு
அடுத்தவரறியாமல் நடந்துபார்த்த
அப்பாவைச் சுட்ட சூட்டில்
எனக்கே நாக்கு வெந்துபோயிருக்க,
தொட்டில் பழக்கத்தின் முற்றலாய்
அப்பா தொடர்ந்து சிரித்தார் என்னைப் பார்த்து…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s