25. அப்பாவின் வால்வு

டியும் மின்னலும்போல
டயலில் வெளிச்சம் முதலில் வந்து
ஆல் இண்டியா ரேடியோ
– என்று அது பேசத் துவங்க
ஒவ்வொரு தடவையும் நாங்கள் காத்துக்கொண்டிருந்த
வால்வு செட்டை
அப்பா புதிதாய் வாங்கிவந்த டிரான்சிஸ்டர்
பரணில் போட்டது.
*
ஆனால்
அது பேசிக்கொண்டிருக்கும் ஏதாவது ஒன்றைத்தான்
நாம் கேட்கவேண்டும் என்று அதுவும் வற்புறுத்திற்று.
*
அப்பா இப்பொழுது வாங்கி வந்த
டூ இன் ஒன்னைப் பார்த்து மாய்ந்து
டிரான்சிஸ்டருக்கு பாட்டரி லீக் ஆயிற்று.
*
அது
நாங்கள் விரும்பியதைப் பாடிக் காட்டிற்று.
நாங்கள் பேசியதைத் திரும்பப் பேசிற்று…
அந்த யந்திர விகடம்
கொஞ்சநாள் எங்களை மயக்கி வைத்திருந்தது.
*
அப்புறம் அப்பா வாங்கி வந்த டீவிக்கு பயந்து
அது ஒரு பல்லிக்குத் தன்னை விட்டுக்கொடுத்தது.
*
அதேபோல்
வி.ஸி.ஆரும் டிஷ் ஆன்டனாவின் கேபிளும் இப்போது
மீனெலும்பு ஆன்டனாவை இத்துப்போக்கியிருக்க,
*
என்ன பிரச்சனை என்று கேட்ட டாக்டரிடம்
என்னை ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டார்கள் என்று
குறைபட்டுக்கொள்ளவும் வால்வு செட்டாய்
இரண்டு நிமிடம் ஆயிற்று அப்பாவுக்கு…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s