24. அப்பாவின் பாசம்

நான் விரும்பிய என் எதிர்காலத்தைத் தேடிக்கொண்டு
ஐநூறு கிலோமீட்டர் தொலைவில்
அடுத்தவர் வீட்டில் அப்போது இருக்கையில்
அப்பாவிடமிருந்து வாரம் இரண்டு கடிதம் வரும்…
*
கடிதத்தைப் படித்த அடுத்தவர்கள்
கையொலித்துச் சிரிப்பார்கள்
*
அப்பா ஐநூறு கிலோமீட்டருக்கப்பால் இருந்துகொண்டு
நூத்திமூணு டிகிரி வெய்யிலாமே – என்று
தொலைக்காட்சிச் செய்திக் கடைசியில் பார்த்துவிட்டு
மாய்ந்து மாய்ந்து எழுதியிருப்பார்…
*
கடிதம் படித்த மறுநாள் – வெயில்
அதன் தயவில்
இன்னும் இரண்டு டிகிரி ஏறிவிட்டிருக்கும்.
*
தங்களுக்குக் கிட்டாதுபோன
தகப்பன் காதலின் தாத்பர்யம்
உள்ளுணர்ந்த மற்றவர்கள்
வெளியே உமிழும் பரிகாசத்தின்
உயிரை உணர்ந்து வைத்திருந்த நான்
அவர்களை கர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன்…
*
கடைசியில்
அப்பாவின் பாசம் வென்றது என்று
லட்சிய ரேகைகளின்
சுவடுகளையும் அழித்துக்கொண்டு,
என் விருப்பம் அறிந்து
அவர் அனுப்பினார் என்பதாய்
அவர் விருப்பம் உணர்ந்து
நான் திரும்பினேன்.
*
– வேண்டாம் என்று சொல்லாமலேயே
காரியம் முடித்துக்கொண்ட
அப்பாவின் சூது உணராமல்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s