20. அப்பாவின் பாவனைகள்

ண்பனென்று நான் சொல்லிக்கொள்ள
இப்போது வெட்கப்படும் ஒருத்தனின் கால்விரல்கள்
நேர்க்கோட்டில் நீண்டு
டார்வின் கண்டதைக் கால்களினளவு எனக்கும் தெரிவிக்க,
அவன் தன் போக்கில் சொல்லிக்கொண்டிருந்தான்,
– எங்கப்பாவுக்கும் இப்படித்தான்…
இந்தப் பற்களுக்கிடைய பிளவு இருக்கிறதே,
இதுவும் எனக்கும் என் அப்பாவுக்குமான ஒன்று!
*
அவனுக்கு அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளவேண்டிய
அவசியம் இருந்தது…
என் எண்ணங்கள்
அத்தகைய ஊர்ஜிதாவஸ்யங்களைப்
புறங்கண்டு புன்னகைத்துக்கொண்டிருப்பதை உணராது
உனக்கும் உன் அப்பாவுக்கும் எப்படி?
– என்று கேட்டான்.
*
ஒரு தூரக்கிழட்டுச் சொந்தக்காரர்
எப்போதோ ஒருதரம் வந்ததற்கு
எனக்கும் தனக்கும் இடையில்
அரைத் தலைமுறை இடைவெளி விட்டுப்
போயிருந்த;
ஒற்றைப் புகைப்படத்தில்
எனக்கு அடையாளங்காட்டப்பட்ட
என் பாட்டனை என் முகத்தில் கண்டுவிட்டார்.
*
நான் என் புரிதல்களுக்கு வெளியே வந்து விழுந்தேன்…
*
அப்பாவின் பாவனைகள்
என்னுள் பாய்ந்திருப்பதன் சதவிகிதம்
ஜீன்களின் பூதாகரமாய்
என்முன்னே எழுந்துகொண்டிருக்க,
என் புரிதல்களுக்கப்பாற்பட்டும்
என் அப்பாவின் பாவனைகளை – நான்
என் மகனுக்காகச்
சுமந்துகொண்டுபோவதைப் பார்த்துக்கொண்டு
இயற்கையின் முன்
நம் இயலாமையின் திண்ணையில்
சாய்ந்துகொண்டேன்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s