19. அப்பாவின் செல்லம்

எதுவும் எதற்கும் பாதித்திராத அப்பாவை
அவர் எனக்குச் செல்லங்கொடுத்துக் கெடுத்தார் என்று
அவர்கள் சொன்னார்கள்.
*
செல்லம் கொடுக்கிற அப்பாவின் முகம்
பிள்ளைக்கு அழகானது.
ஆனாலும் நான்
செல்லத்தை உணராது திரிந்தேன் என்பதால்
அவர்கள் சொன்னதை
பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டிருந்தேன்.
*
அந்த ஏற்பு
அப்பா எனக்குச் செல்லம்தான் கொடுத்தார் என்று
தமக்கு வாய்க்காததைச் சொல்லிச் சுகப்பட்டுக்கொண்டிருந்த
நாவுகளின் வாயிலாய் என்னுள் பதிந்து போயிற்று…
*
நான் கேட்டதெல்லாம்
கிடைக்கச் செய்துகொண்டிருந்த அப்பா
நான் எதைக் கேட்பது என்று
தெரிவித்திருக்கவில்லையாதலால்
என்னைச் சுற்றிலும்
அசிங்கமும் அனாவசியமும் கூடிய வஸ்துக்கள்
மட்டுமே எஞ்சிக்கொண்டிருந்தன.
*
அப்பாவின் செல்லத்தைக் கண்டுணர்ந்த அவர்கள்
அறிந்துகொள்ள இயலாத என் இயலாமையின் பின்னால்
பொங்கிப் பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்…
அவர்கள் கண்ட அந்தச் செல்லம்
அசிங்கங்களின் குவியலில் அவர்களுக்கு
தரிசனமே தந்திருக்கவேண்டும்…
*
ஆனால் ஒருதரம்
அப்பாவின் நண்பரொருத்தர்
என் துடுக்குத்தனத்துக்கு இறையாக நேர்ந்தபோது
அப்பா சுமந்துகொண்டிருந்த மௌனத்திலிருந்தும்
நான் கேட்காதவை கிடைக்காதிருந்து வந்ததிலிருந்தும்
அப்பாவின் முகம் எனக்குப் புலப்பட்டுவிட்டது.
*
அப்பா
செல்லமும் கொடுத்திருக்கவில்லை
செருப்பாலும் அடித்திருக்கவில்லை.
எதுவும் எதற்கும் பாதித்திராத மையத்தில்
அவர் இருக்கையில் அவர் வீற்றிருந்தார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s