18. அப்பாவின் ஜாகைகள்

ப்பா
உத்யோகத்தின் பின்னால்
எங்களையும் இழுத்துக்கொண்டு அலைந்தார்.
*
லாரிகளின் வெப்ப வாடைக் கேபின்களை விரும்பி
ஒவ்வொரு தடவையும்
ஒரு ராத்திரி தூரங்களில்
கேரம்போர்டு நனைந்த மழையிலும்கூட
எங்கள் அடுத்த ஜாகைக்குப் போய்க்கொண்டிருந்தோம்…
*
வில்லை ஓடுகளும்
சீமை ஓடுகளும்
சிமிண்டுத் தளங்களுமாய்
அங்கங்கே எங்கள் ஜாகைகள்
முன்பிருந்த அதிகாரியின் மிச்சங்களான
காகிதங்களும் கொட்டாங்குச்சிகளும் கரப்பான்பூச்சிகளும்
ஒருசில சமயங்களில்
தேள்குட்டிகளும் பாம்புக்குட்டிகளாகவும்கூடக்
காத்திருந்து எங்களை அனுமதித்துக்கொண்டிருந்தன.
*
நாங்களும் எங்கள் மிச்சங்களை
விட்டுவிட்டுப் பெயர்ந்துகொண்டிருந்தோம்.
*
ஜாகைகளும்
பாம்புப்புத்துக்கருகிலும்
பள்ளிக்கூடத்துக்கருகிலும்
அக்ரஹாரங்களிலும்
சிமிண்ட்டுச் சந்துகளிலும்
மலையடிவாரங்களிலும்
அடித்த மழையிலும்
பொடித்த வெயிலிலும்கூட
அப்பாவுக்காக் காத்துக்கொண்டுதான் இருந்தன.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s