17. அப்பாவின் க்யூவில்…

முப்பது வருஷத்து அதிகாரம்
வங்கி வில்லையாய்ச் சுருங்கிப்போயிற்றென்று
வரிக்கண்கள் வெறித்துக்கொண்டு
விருத்தர்கள் நின்ற வரிசையில்
நானொருத்தன்தான் இளைஞன்.
*
இப்படியாக
அந்தக் க்யூவில் நிற்கும் அவசியம்கூட இல்லாது
எங்கும் தப்பிவந்த அப்பாவின் தள்ளாட்டமும்
அவர் இங்கும் தப்ப
தயை செய்துகொண்டிருக்கையில்
நான் என்னை அழித்து
அப்பாவை அங்கே பொருத்திப்பார்த்துக்கொண்டிருந்தேன்.
*
எங்கும் நுனிப்புல் மேய்ந்துவந்த
அந்தக் கால அப்பா இதற்குள்
இத்தனை விருத்தர்களின் வற்றிப்போன உணர்வுகளுக்கும்
இந்நேரம் ஹாஸ்யம் வார்த்து,
காத்திருத்தல் அற்புதம் என்கிற-
மூன்றாம் கோணத்தைத் திறந்துவிட்டிருப்பார்.
*
அதற்காக அப்பா இப்போது
ஆழப்புல் மேயத் துவங்கினார் என்பதல்ல அர்த்தம்.
அப்பாவின் நாவுக்கு
நுனிப்புல்லின் சுவையும் மரத்து
தன்னைச் சுற்றிலும் தன் அருந்தலின்பொருட்டு
தன்னையே அவர் நிறுத்திக்கொண்டுவிட,
அந்தக் க்யூவில் அப்பா அழிந்து
நான்தான் நின்றுகொண்டிருந்தேன்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s