15. அப்பாவின் ஜாதகம்

ன் எதிர்காலத்தைப் புரட்டிக்கொண்டிருந்த
கஞ்சா ஜோசியனின் கண்களில்
அப்பாவின் ரேகைகளின் தெளிவுகள்
ஒருகணம் தென்பட்டுவிட
உங்கய்யா ஜாதகத்தப் பாக்கணுங்களே
– என்று தன் கவனத்தைக்
கொண்டுவந்து நிறுத்திக்கொள்ளும் பொருட்டு
ஒரு பீடி இழுத்துவிட்டு வந்தான்.
*
சுண்டுவிரல், மோதிரவிரல், பாம்புவிரல், ஆள்காட்டிவிரல்…
சுண்டுவிரல், மோதிரவிரல், பாம்புவிரல், ஆள்காட்டிவிரல்
என்று கட்டைவிரலால் தொட்டுத்தொட்டுத்
தன் செயலின் பிம்பங்களைச் சேகரித்துக்கொண்டு
சிவப்புக் கண்களின் சலனம் மறைத்தலுற்று
கருத்து வற்றிப்போன கன்னங்களுக்குள்ளிருந்து
ஐயா ராசாவாட்டம் இருந்திருப்பாஹ – என்று
கழுதைப் பிளிறலாய்ச் சொன்னான்.
*
கட்டி மேய்க்கிற உத்யோகம் பாத்தாஹளா?
அவுஹ புடிக்குள்ளற ஒரு ஊரே இருந்துச்சா?
– என்று இருந்ததா என்கிற பிரயோகத்தின் கனபரிமாணத்தில்
நிகழ்காலத்தை ஒளித்து ஒளித்து விளையாடிக்கொண்டிருந்தான்.
*
கேக்குமுன்ன தந்திருப்பாஹ…
ஒறவுக்காரஹ வளந்த வீட்டுக்கு அன்னமூட்டிருப்பாஹ…
– என்று இன்னும் அவன் தொடர்ந்துகொண்டிருந்த விளையாட்டின்
நாம் அறிந்துகொள்ள விரும்பும் உச்சத்தைப் பற்றிக் கேட்டேன்.
*
அவன் இங்க்குப் பில்லராய்க் கன்னம் நசுங்கி
வார்த்தைகளின் சொட்டுக்களில்
விஷயத்தின் கரும்பு மையைத் துப்பினான்,
– அய்யாவுக்கு அப்படியே ஏஞ்ஜாதகங்ய
அத்தனை சொத்தும் சொகமும் ஆண்டேன்…
இப்ப அடுத்த வேளைச் சீவனத்துக்கு
அய்யா கதையச் சொல்லுதேன்…
*
ஜோசியன்
அடுத்த பாக்கெட் கஞ்சாவுக்கு
அஞ்சுரூபாய் வாங்கிக்கொண்டு போனான்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s