14. அப்பாவின் தொப்புள்

வர் அம்மாவுக்கும் அவருக்கும் ஊடாக
உறவுப் பிணைத்திருந்த
அப்பாவின் தொப்புள்கொடியை
அவர்கள் சரியாக அறுக்கவில்லை…
தொப்பையின் மையத்தில் குமிழாய்
இந்திரனைப்போல அது இன்னொரு கண்ணாய்
விழித்துக்கொண்டிருந்தது.
*
அப்புறந்தான்
கால்சட்டைப் பிள்ளைகளைப் பார்க்க நேரும்போதெல்லாம்
அவர்களின் தொப்புளைச் சரிபார்க்கும் வழக்கம்
எனக்கு ஏற்பட்டிருக்கவேண்டும்…
*
இப்படித்தான்
பிள்ளைகளிற்றுவங்கி பெண்டுகள் வரைக்கும்
பழக்கம் தொடர்ந்திருக்கவேண்டும்.
*
அழகான தொப்புளைக்
காற்று எப்போதேனும் காட்டிக்கொடுக்கும்…
அப்போதெல்லாம்
அந்தப் பிரதேசத்தின் கிறக்கத்தையும் மறந்து
கொடியை அறுத்தவளின் வேலைப்பாங்கை
அறிந்துகொண்டிருப்பேன்.
*
இருந்திருந்து அவளிடம் என்ன இருக்கிறது என்று
அவளைக் காதலித்தாய் என்று
அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்…
*
வெறும் தீண்டலில்
உயிரை உணர்ந்துகொள்ள நேர்ந்துவரும்
தொப்புளின் அழகுமட்டும்
அவயங்களின் இயற்கைக்கு மாறுபட்டு
கைனகாலஜிஸ்டுகளின் கைகளுக்கு
எப்போதோ வந்துவிட்டிருக்க,
அப்பாவின் தொப்புளைப்போல
அப்புறம் ஒரு தொப்புளை
இன்றைக்குவரைக்கும் தேடிக்கொண்டிருக்கிறேன்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s