13. அப்பாவின் நிர்வாணம்

ப்பாவின் கட்டிலோரச் சன்னல் விளிம்பைக் கரம் தேடி
மூத்திரக் கோப்பையை எடுத்துக்கொள்ளும்,
காலகட்டிக் கோப்பையை நிரப்பி
அங்கே திரும்பவும் வைப்பதற்கும்
கண்களின் அவசியம்
அவருக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை.
*
தோளில் ஒரு கரம் கொடுத்துத்
தூக்கிவிட்ட பின்னால்தான்
அச்சு முறிந்த தேராய்
அப்பா அசைந்து நடந்துகொண்டிருந்த
தினங்களின் இரவுகளில்
அப்பாவுக்கு மூத்திரக்போப்பையின்
சிநேகிதம் மட்டுமே வாய்த்தது.
*
அரைத்தூக்கத்தில் அம்மா விழித்துக்கொண்டு
அவ்வப்போது கோப்பையை எடுத்து
ப்ளாஸ்டிக் வாளியில் கொட்டிக்கொண்டிருக்கும்.
அம்மா அடுத்தமுறை விழித்துக்கொள்ளும்போதும்
அது நிரம்பி…
அதன் உறக்கத்தின் ஓர் அம்சமாய்
இச்செயலும் கலந்துபோயிருந்தது.
*
ஒரு தினம் அப்பாவின் கை தவறி அது அபிஷேகம் ஆயிற்று…
*
அம்மா விழித்துக்கொண்டபோது
ஈர வேட்டியைக் குவித்துவைத்த அப்பா
எழுந்துகொள்ள உதவாத இயலாமையின் அரை நிர்வாணத்தோடு
அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
*
அவர்களின் கட்டில்களுக்கிடையில்
எப்போதோ விழுந்துவிட நேர்ந்த இடைவெளியில்
அம்மா சலித்துக்கொண்டு இறங்கிற்று…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s