12. அப்பாவின் பிறந்த தினங்கள்

ப்பா எங்கள் பிறந்த தினங்களில்
பெயரிட்ட பெரிய வட்டக் கேக்குகளை
எல்சில் காற்றால் கேண்டில் அணைத்து
வெட்டச் சொல்லிப் பாட்டுப் பாடினார்…
*
அங்கேயிருக்க நேரும் பத்துப்பேரிலும்
அப்பாவால் மட்டுந்தான் வெட்கத்தை விட்டுப் பாடமுடியும்,
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்…
இது உனக்கொரு சந்தோஷமான பிறந்த தினம்…
*
அப்பாவின் பிறந்த தினங்களில் பாட ஆளிருக்காது.
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர்
பரஸ்பர நம்பிக்கையற்றுப் பார்த்துக்கொண்டபின்
ஹாப்பி – என்று துவங்கிய நானும்
என் ஒற்றைக் குரலின் பைசாசத்திற்கு பயந்து
பாட்டை நிறுத்திப் பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருப்பேன்.
*
அப்புறம் காலப்போக்கில் எங்களுக்கு தைரியம் வந்தது.
ஆனால் அப்போது
அப்பா எங்கள் பிறந்த தினங்களை மறந்துவிட்டிருந்தார்
நாங்கள் அவர் பிறந்த தினத்தை மறந்துபோயிருந்தோம்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s