11. அப்பாவின் வளர்ப்புப் பிராணிகள்

ப்பா வளர்ப்பு மிருகங்களை
விரும்பியதுமில்லை மறுத்ததுமில்லை.
இதை அந்தப் பிராணிகள்
அறிந்திருக்கவில்லை என்று நான் நினைத்தேன்
*
நாங்கள் வளர்த்த நாய்கள்
அவரை வாசலிலேயே நெஞ்சைத்தொட்டு
வரவேற்கத் தவறியதில்லை.
*
பூனைகள் கூட
ஆர்ச்சாக வளைந்து சோம்பல் முறித்து
சுணங்கிக்கொண்டு
அப்பாவின் முதுகைத்தான் தேய்த்து இடம் வந்து
அவர் தொந்திக்குக் கீழே சுருண்டுகொண்டன.
*
மண்ணைத் தோண்டிக்கொண்டுவந்து நான் இட்ட புழுக்களை
வண்ணக் கற்களுக்கிடையே வாழ அனுமதித்த
வாலாட்டும் தங்க மீன்கள்;
கண்ணாடிச் சுவருக்கு அத்தனை அருகில்
நான் பயமுறுத்தினாலும்
பார்த்துக்கொண்டேயிருந்த அவை
அப்பாவைப் பார்க்க மட்டும்
ஆவலாய்க் குழுமிக்கொண்டிருந்தன என்று
என்னுள் இன்னும் கூட ஒரு சந்தேகம்…
*
சிவப்புக் கண்களும் வெள்ளைப் பஞ்சு தேகமுமாய்
வீடெங்கும் வளைய வந்த மூக்காட்டும் முயல்கள்கூட
அப்பாதான் தலைவர் என்பதை அறிந்துகொண்டு
அவருக்காக மத்திமீனைத் தின்று பார்த்தன.
*
அப்படி நாங்கள் அறியாத அப்பாவின் முகத்தைப்
பிராணிகளின் பரிணாமத்தில்
அதுவரை கரைந்துபோயிராத நுட்பங்கள் வாயிலாக
அவை உணர்ந்துகொண்டனவா
என்று நான் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன்.
பிராணிகள் அறிந்த அந்த சூட்சுமம் பின்னால் புரிந்தது…
*
அப்பா ஒருவேளை வளர்ப்பு மிருகங்களை மறுத்திருந்தால்
நாயும் பூனையும் மீனும் முயலும் நானும்
தெருவில் நின்றிருக்கவேண்டும்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s