10. அப்பாவின் கார்

ப்பாவின் அப்பாவின் வீட்டை
அப்பா எப்போதோ விற்றுவிட்டார்.
அந்த விற்பனை என்னை விடவும்
பதினைந்து வயது மூத்தது என்பதால்
என் மூதாதையர் புழங்கின தரைகளிலும் வாசல்களிலும்
நான் தவழாது போனேன்…
*
அதை விற்ற காசில் வாங்கிய கார்
அப்பாவை பாரதமெங்கும் கூட்டிப் போயிற்று.
அதையும் அப்பா விற்றார்.
– அந்த விற்பனை என்னைவிட
பதினாலு வயது மூத்தது.
*
கறுப்பும் மஞ்சளும்,
கதவுகளின் கால்களைப் பிடித்த துருவுமாய்
டாக்ஸி ஸ்டாண்டில்
அதனை அப்பா ஒருநாள் அடையாளம் காட்டினார்.
– உன் அம்மா பேரில் வாங்கிய கார்…
*
அந்தக் காரின் தகரம் என் பரம்பரையின் ரத்தம் பாய்ந்து
சொர்கத்திலிருப்பதாய் நாங்கள் நம்பிக்கொண்டிருக்கும்
என் தாத்தாவின் கண்களால்
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது.
*
அந்தக் காரைத் திரும்பவும்
அப்பாவுக்கு வாங்கித் தரவேண்டும் என்று
முட்டாள்தனமாய் ஆசைப்பட்டேன்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s