09. அப்பாவின் ஆரோக்யம்

ப்பாவின் தயவில்
மூன்று மருத்துவமனைகளைப் பார்த்துவிட்டோம்.
அப்படி ஒவ்வொரு முறையும் அவை
அப்பாவை விளிம்பினின்றும் கரம்பிடித்து
இந்தப்பக்கம் இழுத்துவிட்டன என்பது அர்த்தமல்ல…
விளிம்பின் வாசத்தையும் அப்பா நுகர்ந்துவிடுமுன்
ஆஸ்பத்திரி வாசம் நுகர்ந்துவிடும்படிக்கு நேர்ந்துவந்தது.
*
நான்காவது மருத்துவமனையில்
யார் பேஷண்ட்? – என்றாள் ஒரு தாதி,
அப்பா அத்தனை பளிச்சென்று
பௌடரடித்து உட்கார்ந்திருந்தார்…
இவருக்கா ட்ரீட்மெண்ட்? – என்று
அப்பாவின்
உட்கூட்டுச் சுரப்பிகளும் நாளங்களும்
பட்டுப்போன ரகசியம்
அவர் முகத்தில் கசியாத சூட்சுமம்
உணராது திகைத்துப்போனாள்.
*
அப்பாவின் ஆட்சிக் காலத்தில்
அடக்குமுறைக்குக் கட்டுண்டு
அவருள் ஆஞ்ஞாதவாசம் பண்ணிய நுண்ணியிரிகள்
அப்பா ஓய்ந்ததும்
நியூட்டன் தத்துவமாய்ப் பீறிட்டுக் கிளம்பின என்று
டாக்டர் சொல்லிக்கொண்டிருந்தார்…
இத்தனை அழுத்தத்தை எப்படித் தாங்கினார்? – என்று
பாதரசக் குமிழுக்கு
பாடத்திட்டத்தில் மனவியல் இல்லாத காலத்தில்
படித்துவிட்டு வந்த அவர்
சந்தேகத்தின் தவறுகளைக்
காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.
*
அப்பா வண்ண மாத்திரைகளை
ஆவலாய் விழுங்கிக்கொண்டிருந்தார்.
அப்பாவின் பிரயத்தனம் அத்தோடு நின்றுபோனதால்
அவை மலத்துக்குச் சக்தியளித்துக்கொண்டிருந்தன.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s