08. அப்பாவின் வீரம்

ப்பா குடிப்பார் என்று
அப்போது எனக்கெப்படித் தெரிந்திருக்க முடியும்?
அந்த வார்த்தையையே அறிந்திராத வயசு எனக்கு…
*
அம்மா பத்திரகாளியாய்
என்னையும் அக்காவையும்
அர்த்தம் புரியாமல் அழுகின்ற மழலையின்
தெய்வீகத் துணையின் பொருட்டும்
கரங்களில் பற்றிக்கொண்டு
தட்டிற்று கதவை…
அம்மா நிஜமாகவே பத்திரகாளிதான்,
அது கை கட்டி வாய் பொத்து & என்றால்
ஒரு மணி உட்கார்ந்திருந்த தினங்கள் உண்டு.
அப்போதெல்லாம் அப்பாவின் மத்தியஸ்தம்
அருகாமைத் திரையரங்கில்
அடுத்த சினிமாவாயும் பாப்கார்னாயும் வெளிப்படும்.
*
அப்பா இருந்த உறக்க அறைக்கதவு இடிபட்டது…
நீ என் தம்பியாடா? குடி கெடுக்க வந்தவனே……..
………. நீங்க எக்கேடும் கெட்டுப் போங்க,
நான் என் பிள்ளைகளோட நல்லதங்காளாப் போறேன்…
– எனக்கு அப்போதே நல்லதங்காள் கதை தெரியும்,
என்னைப் பாழடைந்த கிணற்றின் இருட்டும்
கெட்ட நீரின் பலாத்காரமும் மருட்டின.
அழுதே அன்றைக்கு உயிரை விட்டிருப்பேன்…
அப்பாவாச்சும் வெளியே வந்துவிடாமல்
தப்பித்துக்கொள்ளவேண்டும் என்றும்
என் அழுகைக்கு ஓர் அர்த்தமிருப்பது மட்டும்
அம்மாவுக்குத் தெரிந்தால்…?
*
கதவு திறந்து அப்பா தெரிந்தார்
அப்பாவின் காலிடுக்கில் அறையின் மையத்தில் மாமாவும்
அந்த டீப்பாயின் மேலே பாட்டிலொன்றும் தெரிந்தன.
அம்மா ரொம்ப மோசம்…
வாட்டர்பரீஸ் காம்பௌண்டு அதுவே எனக்குத் தரும்,
அப்பா குடித்தால் தப்பா?
*
அப்பாவின் மௌனம் அம்மாவைச் சீண்டிற்று.
சாவேன்… இதோ இதைக் குடித்து என் பிள்ளைகளோடு சாவேன்
– என்று எதுவும் ஒரு பாட்டிலைக் காட்டிற்று…
*
அப்பா வாய் திறந்து ஒரு வார்த்தை மட்டும் சொன்னார்
சரி!
– கதவடைத்து உள்ளே போனார்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s