07. அப்பாவின் கரம்

ஃபீஸ்ல எங்கப்பா டெரர் – என்றான் கண்ணகுமாரன்.
இந்த ஊரையே விலைக்கு வாங்குகிற
சம்பாத்தியமுள்ள வேலையில்
அவன் அப்பா சம்பளம் மட்டும் வாங்கினார்…
*
என் கண்களில் நிராசையின் கசிவை
அவன் கவனித்துவிட்டிருக்கலாம்,
இப்படி ஓர் அப்பா யாருக்குக் கிடைப்பார்?
*
ஏதுடா புதுச் சைக்கிள்? – என்றதற்கு
அப்பாவுக்கு ப்ரஸன்ட் வந்துது – என்றான் விசுவநாதன்.
அவன் அப்பாவுக்குச் சம்பளத்தை அன்றைக்கே
ஒரு யாசகனின் முதுகு வளைவோடும்
பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.
அவங்கப்பா ரொம்ப சாமார்த்தியம்.
*
என் கண்களில் நிராசையின் கசிவை
அவன் கவனித்துவிட்டிருக்கலாம்,
இப்படி ஓர் அப்பா யாருக்குக் கிடைப்பார்?
*
எனக்கு இரண்டுமே லபிக்கவில்லை…
*
என் அப்பா அத்தனை பெரிய கையில்
ஒரு பாக்குத்தூள் அளவு பெற்றுக்கொண்டிருந்தார்.
எனக்கு இரண்டு பட்டை காட்பரீஸும்
அப்பாவுக்கு ஒரு பாட்டில் பீரும் வாங்கி வந்தவனுக்கு
பத்து லட்ச ரூபாய் டெண்டரில்
அப்பா கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார்…
*
அவர்கள் அதிகம் கேட்டுவிடுமுன்
எங்கப்பா சுத்தம் – என்று கண்ணகுமாரனிடமும்
சாமார்த்தியம் – என்று விசுவநாதனிடமும்
நிஜங்களின் விளிம்புகளைச் சொல்லி
பொய்யில்லாமலேயே
அவர்களின் நட்பைப் பத்திரப்படுத்திக்கொண்டபோது
அப்பாவின் அருமை புரிந்தது…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s