06. அப்பாவின் நாடகங்கள்

தியைப்போல
எங்கும் தேங்காமல் நகர்ந்துகொண்டிருந்தார் அப்பா…
மாஜிஸ்ட்ரேட்டின் மகன் கூத்தாடியாய்ப் போவதா என்று
அப்பாவைப் பிய்த்தெடுத்து
அரசாங்க வேலையில் போட்டார் தாத்தா.
*
பத்து வருடம் கழித்து மனம் பொங்கியிருக்கவேண்டும்
அப்பா தான் அப்போது வேலை பார்த்த நகரில்
நாலு பேரைச் சேர்த்துக்கொண்டு
ஒன்றிரண்டு அமெச்சூர் நாடகங்களில் வடிகால் தேடினார்…
*
ஆண்கள் பெண்களென அபிநயித்த மேடைகளின்
கடைக்காலமாய் இருந்தது அது.
*
அப்படியொரு அத்தாட்சி ஷீல்டு
இன்னும் அலமாரியில் இருக்கிறது…
*
அப்பா புகழக் கிறங்கினார்…
*
மேடையில் துவங்கி
அவரது நாடகங்கள் வீதிக்கும்
வீட்டுக்கும் வந்து சேர்ந்தன…
*
எல்லோரும் அப்பாவைப்
புகழ்ந்தவண்ணமாய் இருந்தார்கள்.
*
அப்பாவின் இமேஜ்
ரகசியங்களைப் புதைத்த மண்ணில்
வளரத் துவங்கிற்று.
*
அப்பா தன் முகத்தை எப்போதோ தொலைத்துவிட்டிருந்தார்.
அரிதாரத்தால் அவர் ஏற்றிக்கொண்டிருந்த புதிய வடிவம்
இழகின் இயல்பான தன்மைகளோடு
அவர்களின் கண்களைக் குருடாக்கிவிட்டிருந்தது.
*
அவர்கள் இப்போது
அப்பாவைப் புகழ்ந்தவண்ணமாய் இருந்தார்கள்
அவர்கள் இப்போது
அப்பாவின் நடிப்பாற்றலை மறந்துபோயிருந்தார்கள்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s