05. அப்பாவின் கல்யாணங்கள்

ப்பா பத்தொன்பது வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டார்…
அதன்படி அது அவர் அப்பாவின் விருப்பப்படி நடந்தது.
*
அப்பாவின் விருப்பப்படி
அப்புறம் அவ்வப்போது நடந்த கல்யாணங்கள் குறித்து
அப்பாவின் பால்ய நண்பரொருவர்
அப்பாவோடு தான் பிணங்கியிருந்த காலத்தில்
எனக்குத் தெரிவித்தார்.
அவர் உதாரணம் தர நேர்ந்த
இக்கால வில்லி வேஷ நடிகை
பழைய திரையில் குலுக்கையில்
நான் ரசித்தது தவறா என்று
புதுக்குழப்பம் ஒன்று கிளம்பிற்று என்னுள்…
*
அப்பாவுக்குப் பல தேசப் பெண்களைப் புணர
வாய்ப்பு கிட்டிற்று என்பது எனக்குத் தெரியும்,
ஆனால் புணர்ந்தாரா என்பது
அவர்களுக்குத்தான் தெரியும்…
*
அப்பாவுக்குக் கீழே வேலை பார்த்த ஒருத்தனின்
வெள்ளைத்தோல் பெண்டாட்டியிடம் அம்மா வெறுப்புத் துப்பியது
அவள் தோல் நிறத்தால் பற்றிக்கொண்ட தீயால் அல்ல என்று
அவள் என்னைப் புத்திர வாஞ்சையோடு பார்த்தபோது புரிந்தது.
*
அப்பாவுக்கு என்ன காய்ச்சலா என்று
பஸ்ஸில் அவர் மடியில் தூங்கிக்கொண்டு வந்த நான்
திடுக்கிட்டுக் கண் விழித்தபோது
நெரிசலில் அப்பாவின் சாத்வீக வதனத்தை நம்பி
அருகே வந்து நின்றுகொண்டிருந்த யுவதியின் காலை
அப்பாவின் கால் ஏன் நிரடுகிறது என்று
யோசித்துக்கொண்டே தூங்கிப்போனேன்.
*
இவருக்குச் செய்யவே ஒரு ஆள் வேண்டிருக்கு – என்று
இரட்டை வேலையால் அம்மா சலித்துக்கொண்ட
அப்பாவின் அந்திமக் காலங்கயில் ஒருநாள் நான்
இன்னொருத்தியை நீங்களே கட்டி வைத்திருந்தால்
இப்போது பகிர்ந்துகொள்ளலாமே – என்றதற்கு
அம்மா முறைத்து, உனக்கென்ன தெரியும்? – என்றது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s