04. அப்பாவின் க்ஷவரம் 2

ப்பாவின் கட்டைமயிர் மழித்த முகத்தில் ஒட்டிக்கொண்ட அளவு
என் முகத்தில் பௌடர் ஒட்டிக்கொள்ளும் பொருட்டேனும்
எனக்கும் கட்டைமயிர் வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.
*
அதே காரணத்தால்தான்
பெண்மை நிரம்பிய என் பால முகத்தில்
அத்தனை நுரை பொங்கவில்லையென்றும்
நுரைக்கும் நீருக்கும் ஊடான
ஒப்பந்தம் உணராது ஊகித்துவைத்திருந்தேன்.
*
என் துவக்ககால க்ஷவரங்களை
அவரறியாமல்தான்
அடுத்த வீட்டு அம்மாளின்
நிர்வாணத்தைப் பார்க்க நேர்வதுபோல்
ரகசியமாய்ச் செய்துகொண்டிருந்தேன்…
*
அப்புறம் அப்புறம் அவரறிய நான்
மழிக்கத் தலைப்பட்டபோதெல்லாம்
என் எதிர்பார்ப்பை எதிர்பாராது அவர்
என் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதும்
என்ன இருக்குன்னு மழிக்கறே? – என்று கேட்காததும்
விடையில்லாக் கேள்விகளாய் வெகுகாலம் இருந்துவந்தன.
*
கேள்விக்கு விடை கிடைக்கையில்
அப்பா தன் தளர்ந்த கரத்தில்
தன் யானை மயரடைத்த ரேஸரின் பாங்கை உணராது
என்னை இயலாப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s