03. அப்பாவின் க்ஷவரம் 1

ன் பத்தாவது வயதில்
அப்பா தன் அப்பாவைப்போல
முகத்தில் நுரை பூசிக்கொண்டு முயற்சி செய்ததில்
முகம் கிழிந்தது என்று ஒருநாள் சொன்னார்.
ஒருவேளை
வெட்டத்தழைக்கும் புளியனாய்
அதற்கப்புறந்தான் அப்பாவின் முகம்
இத்தனை கட்டை மயிர்களை
விளைவிக்கத் துவங்கிற்றா தெரியவில்லை…
*
அல்லது
அப்பாவின் சிவப்புத்தோலுக்குக்
கருப்பு மயிரின் பச்சை வேரும் தென்படும் என்பதாலோ
அழகின்மேல் தான் கொண்ட பற்றினாலோ
பெண்களுக்கு மத்தியில் வளர்ந்ததாலோ
ஏதோ ஒன்றால்
அப்பா தினந்தோறும் மழிக்க மழிக்க
அது இப்படி விளைந்திருக்கவேண்டும்…
*
அப்பாவின் வாயிலாகத்தான்
உலகின் அத்தனை பிளேடுகளின் பெயரையும் அறிந்துகொண்டேன்…
அவ்வப்போது அவரறியாமல் கவனித்துத்தான்
அடுத்தவர் தயவின்றி மழிக்கக் கற்றுக்கொண்டேன்.
*
இங்கே தப்புச் செய்கிறாய் என்று
அப்பா ஒருநாள்கூட வந்து சொல்ல நேரவில்லை
நான் அத்தனை நேர்த்தி – என்பதாக எண்ணிக்கொண்டிருந்த வடிவம்
அப்பாவின் முகத்தில் அவரின் நிஜமுகத்தைக் கண்டுகொள்ள நேர்ந்த பின்பு
சிதைந்தது.
*
அதன்படி
அப்பாவுக்குத்
தன் முகத்தின்மேல் இருந்த அளவுக்கு அக்கறை
என் முகத்தின்மேல் இருந்திருக்கவில்லை.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s