02. அப்பாவின் மீசை

என் முதல் புத்தகம் அப்பா 1997இல் வெளிவந்தது என்றாலும் உண்மையில் அது எழுதப்பட்ட வருடம் 1994.

ப்பாவுக்கு மீசை என்றால் கொள்ளை ஆசை என்று
ஒருதரம் நான் மீசையை மழித்தபோது புரிந்துகொண்டேன்.

*
அப்பா தன் மௌனத்திலிருந்து புறப்பட்டு
ஏன் எடுத்தே? – என்று கேட்டார்.
அவரின் செய்திகளிலிருந்து கட்டளைகள் வரைக்கும்
அவர் உபயோகித்த இந்தத் தாழ் தொனியிலிருந்து
நாம்தான் ரகம் பிரித்துக்கொள்ளவேண்டும்…
*
அத்தனை ஆசை இருந்தால்
அப்பா ஏன் திருமால் மாதிரி
முகத்தை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்?
ஐந்து அக்காக்களின் மத்தியில்
அப்பாவின் அரும்பு மீசை அவமானப்பட்டது என்று
அப்பாவின் பால்ய ரகசியம் ஒன்றை அம்மா அப்புறம் சொல்லிற்று..
*
அப்பாவின் கிருதாக்கள் மட்டுமே நரைத்திருப்பதாய்
அவரின் ‘ட்ருடோன்’ ரகசியம் அறிந்து வைத்திருந்த எனக்கு
மஞ்சள் காமாலையின்போது அவர் மழிக்காமல் விட்ட முகத்திலிருந்து
இரண்டு விஷயங்கள் புலனாகின…
*
முகத்துச் சர்க்கரையை மூக்கின் கீழ் அனுமதிக்க
அவர் விரும்பவில்லை…
அப்பாவுக்கு மீசையைக் காட்டிலும்
இளமையின் மீதுதான் கொள்ளை ஆசை…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s