01 அப்பாவின் இளமை

என் முதல் புத்தகம் அப்பா. 1997ல் வெளியான 50 கவிதைகளின் தொகுப்பு. இது முதல் கவிதை.

ப்பாவின் பல்செட்
இரவு முழுவதும் அவர் இளமையைக் காக்கிற முயற்சியில்
இன்னுமொரு நாமகரணமற்ற நாற்றத்தின் களமாய்…
*
அதிகம் அறிந்திராதவர்கள் மத்தியில்
அவர் தும்ம நேர்கையில்
பத்தடி தள்ளி அது விழுந்தது கண்டு
அவர்கள் பயந்துபோய்விடுகிறார்கள்,
அதைக் கழுவாமலும்கூட
அவசரமாய் அப்பா திணித்துக்கொள்கையில்
அவர் வயதை அவர்கள் ஒருகணம் பார்த்துவிட்டதாய்
அப்பாவின் முகத்தில் ஒரு பேய் அறைந்துவிடுகிறது…
*
அதிகநாள் கழித்து
அப்பாவைத் தேடி வந்த
பற்களற்ற பால்ய ஸ்நேகிதர்
அப்பாவின் பற்களைச் சிலாகிக்கையில்
நான்தான் முட்டாள்தனமாய்க் குட்டை உடைத்தேன்…
அவர் அப்படியா, எப்பக் கட்டினே? என்றதற்கு
அப்பா, இப்பத்தான், ரெண்டு வருஷமாச்சு என்று
ஒரு பதினைந்து வருடப் பொய்யைச் சொன்னார்.
*
எலும்பு கடிக்கையில் உடைந்துபோன
பழைய பல்செட்டும் கம்பி கட்டி
இனியும் கபோலம் வளரப் போவதில்லை என்ற நம்பிக்கையில்
பதிலியாய்க் காத்திருக்கையில்
இரவில் கழற்றி வையுங்களேன்… என்று
நான் சொன்னதையும்
எதையும் மறுத்துப் பழக்கமில்லாத அப்பா
அப்படியே ஒப்புக்கொண்டுவிட,
உதய காலங்களில் அப்பா ஊமையாகிப் போனார்.
**
அப்பா வாய் கொப்பளித்து
கைத்தாங்கலாய்த்
தன் கிழட்டுத்தனத்தின் அத்தனை அடையாளங்களோடும்
வந்து உட்கார்ந்தார்.
தன் புதிய தினங்களின் முதல் ஆவலாய்
அன்றைக்கும்
அம்மாவின் கைகளிலிருந்து அதைப் பிடுங்கி
வாய்க்குள் திணித்துக்கொண்டார்…
*
அப்பாவின் இளமை திரும்பி வந்தது
அவரைப் பார்க்க யாரும் வந்துவிடுமுன்…
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s